/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெள்ள நீர் சூழ்ந்ததால் பாதிப்பு குன்றத்துாரில் சர்வீஸ் சாலை மூடல்
வெள்ள நீர் சூழ்ந்ததால் பாதிப்பு குன்றத்துாரில் சர்வீஸ் சாலை மூடல்
குன்றத்துார்:தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை அதிகம் பயன்படுத்துகின்றன.இந்த சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையை, ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் ஒரு பகுதி, குன்றத்துார் முருகன் கோவில் அருகே வெளிவட்ட சாலையின் சர்வீஸ் சாலையை கடந்து சென்று, அடையாறு கால்வாயில் சேர்கிறது.மூன்று அடி ஆழத்திற்கு மேல் சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், சர்வீஸ் சாலை நேற்று மூடப்பட்டது.இந்த வழியே குன்றத்துார், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், வெளிவட்ட சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்று, மாற்று வழியில் குன்றத்துார், திருமுடிவாக்கம் சுற்றுப்புறத்திற்கு செல்கின்றனர்.