உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் செரப்பனஞ்சேரியில் சுகாதார சீர்கேடு

சாலையோரம் தேங்கும் கழிவுநீரால் செரப்பனஞ்சேரியில் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி ஊராட்சியில் வடிகால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சி, அண்ணா தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு அருகே சாலையோரம் தேங்கி வருகிறது. மேலும், கழிவுநீரில் கொசு அதிகரித்து, அப்பகுதியில் வசிப்போர் கொசுக்கடி தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், தொற்றுநோய் பரவும் அச்சத்தில் அப்பகுதியில் வசிப்போர் உள்ளனர். மேலும், மழை காலங்களில், மழைநீர் வீடுகளை சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு மற்றும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை