உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரைகுறை மழைநீர் வடிகால்வாயால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

அரைகுறை மழைநீர் வடிகால்வாயால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.ஒரகடம், வல்லம் வடகால், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் லட்சகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினால் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது. இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாய் பணிகளை முழுமை பெறாமல் அரைகுறையாக விடப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர், மழைநீர் வடிகால்வாயில் இருந்து சாலையில் வெளியேறி, ஆறு போல் ஓடுகிறது.இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வழுவழுப்பான சாலையில், வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.மேலும், சாலையில் வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், முகசுளிப்புடன் நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, அரைகுறையாக விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாய் பணிகளை முழுமைபடுத்தி, சாலையில் வெளியேறும் கழிவுநீரை தடுக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை