உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் காலி இடத்தில் கழிவுநீர் குட்டை வெள்ளகுளம் பகுதியில் சுகாதார சீர்கேடு

கோவில் காலி இடத்தில் கழிவுநீர் குட்டை வெள்ளகுளம் பகுதியில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் குட்டை போல தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி, இரண்டாவது வார்டு, வெள்ளகுளம் அருகே தாமரை பள்ளம் தெருவில் சாலையோரம் கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பை காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, கால்வாய் அருகில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் குட்டைபோல தேங்கியுள்ளது. மாதக்கணக்கில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து, அருகில் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் வெள்ளகுளம் அருகே உள்ள தாமரைபள்ளம் தெருவில், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கவும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் குட்டைபோல தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை