உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநராட்சி, 23வது வார்டு, சின்ன காஞ்சிபுரம், கன்னி கோவில் தெருவிற்கும் மாகாளியம்மன் கோவில் தெருவிற்கும் இடையே வரதராஜபுரம் பின் தெரு உள்ளது.இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் நிறைந்த இந்த சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது.தொடர்ந்து வழிந்தோடும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ