சிங்காடிவாக்கம் - மருதம் சாலை சீரமைக்க வலியுறுத்தல்
சிங்காடிவாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம்-மருதம் சாலை வழியாக, வழியாக ஏனாத்துார், வையாவூர், ஊத்துக்காடு, கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் இணைப்பு சாலையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. தெருமின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்ட பகுதியை கடக்கும்போது நிலைதடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த நிலையில் உள்ள சிங்காடிவாக்கம் - மருதம் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.