உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

உத்திரமேரூர்உத்திரமேரூரில், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. உத்திரமேரூரில், அரசு மாதிரி நடுநிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -- மாணவியரில், பின் தங்கியவர்களை கண்டறிந்து தனியாக பயிற்சி அளிக்க வேண்டும். எந்த பாடத்தில் மாணவ -- மாணவியர் குழப்பத்தில் உள்ளனர் என்பதை அறிந்து கொண்டு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவ -- மாணவியரின் தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். படிக்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு, அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கேற்ப கல்வி கற்க தயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிற்சியில், 40க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !