உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோனேரிகுப்பம் ஊராட்சியில் சிறுபாலம்

கோனேரிகுப்பம் ஊராட்சியில் சிறுபாலம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகர், திருக்குமரன் தெருவில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் இடத்தில் சிறுபாலம் இல்லாததால், கால்வாய் வாயிலாக மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறுபாலம் கட்ட வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியினரும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 2.31 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அப்பகுதியில் மழைநீர் தடையின்றி செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை