மேலும் செய்திகள்
40 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்
07-Feb-2025
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி தலைமையில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமில் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர். தொடர்ந்து, மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கான பதிவும் நடந்தது. மேலும் ஐந்து நபர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்தும், 30 பேருக்கு புதிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
07-Feb-2025