உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிருங்கேரி சாரதா பீடம் சுவாமிகள் வரும் 26ல் காஞ்சி விஜய யாத்திரை

சிருங்கேரி சாரதா பீடம் சுவாமிகள் வரும் 26ல் காஞ்சி விஜய யாத்திரை

காஞ்சிபுரம்:சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யார் விதுசேகர பாரதி, சன்னிதானம், விஜய யாத்திரையாக வரும் 26ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள சிருங்கேரி சாரதா பீடம் திருமண மண்டபத்திற்கு வருகை தருகிறார்.ஆசார்யாளுக்கு பாத பூஜையும், வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து ஜகத்குருவின், அருளாசி உரையும் நடைபெறுகிறது.இரவு 8:00 மணிக்கு சன்னிதானம், சாரதா சந்திரமவுலீஸ்வர பூஜை செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 27ம் தேதி, சாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜையும், பாத பூஜையும் நடைபெறுகிறது.வரும் 28ம் தேதி, ஏகாதசி திதி, ஜகத்குரு சந்திரசேகர பாரதி மஹா சுவாமிகளின் ஜெயந்தி பூஜையும், பாத பூஜையும் நடைபெறுகிறது என, காஞ்சிபுரம் சிருங்கேரி சாரதா பீடம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ