உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்

திறந்த நிலை மின் பெட்டி அச்சத்தில் மாணவர்கள்

ஸ்ரீபெரும்புதுார்:திருமங்கலம் அரசு பள்ளி அருகே, மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மின் பெட்டி மூடாமல் இருப்பதால், மாணவர்கள் மின் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.பள்ளியின் நுழைவாயில் அருகே உள்ள மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மீட்டர் மற்றும் லைட் சுவிட்ச் உள்ள பெட்டி திறந்த நிலையில் உள்ளது.இதனால், பள்ளி மாணவர்கள் விளையாட்டாக மின் பெட்டி அருகே சென்று விளையாடும் போது, மின் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள மின் பெட்டியில், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மூடி ஏற்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ