உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விருட்ச விநாயகர் கோவிலுக்கு 25 வகை மரக்கன்றுகள் வழங்கல்

விருட்ச விநாயகர் கோவிலுக்கு 25 வகை மரக்கன்றுகள் வழங்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை, உக்கம்பெரும்பாக்கத்தில், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திர விருட்சங்கள், 12 ராசிகளுக்கான விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இக்கோவிலுக்கு, உத்திரமேரூர் அடுத்த கைத்தண்டலம் கிராமத்தில் எழில்சோலை அமைப்பின் நிறுவனர் மரம் மாசிலாமணி, அரிய வகை விருட்சங்களான மந்தாரை, சுடுமுருங்கை, கருமருது, பூமருது, மகிழம். ஆண் குன்றுமணி, கடுக்காய், தான்றிக்காய், அசோகா, கருங்காலி, திருவோடு, ருத்ராட்சம், வேங்கை, நீர்மருது, நாகலிங்கம், கடம்பு, சொர்க்கம், வன்னி, முள்முருங்கை, உள்ளிட்ட 25 வகையான மரங்களை, கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்க, கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி