உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம்

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம்

வாலாஜாபாத்:ஊத்துக்காடு ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் அம்மன் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடில் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் நவராத்திரியை முன்னிட்டு பல்வேறு குழு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்திரி உத்சவமும் துவங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து கோவில் வெ ளிபுறத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை