உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சகதிக்காடான சிவன்தாங்கல் சாலை

சகதிக்காடான சிவன்தாங்கல் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட சிவன்தாங்கல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலை சேதமடைந்து சகதியாக மாறி, நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளது.பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பெண்கள், வயதானோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றர். இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சகதியான சாலையில் வழுக்கி விழுந்து வருகின்றனர்.மேலும், இரவு நேரங்களில் சாலையில் படுத்து உறங்கும் மாடுகளால், சாலை முழுதும் மாட்டு சாணம் கழிவுகள் உள்ளன. இவை, மழைநீருடன் கலந்து சகதியாக மாறி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, சகதியான சாலையை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி