மேலும் செய்திகள்
அவளூர் பாலாற்றில் அவலம் குப்பை கொட்டி சீரழிவு
20-Jan-2025
அவளூர்,காஞ்சிபுரம் ஒன்றியம் அவளூர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 2019 - -20ம் ஆண்டு, 7.96 லட்சம் ரூபாய் செலவில், ஒரு மணி நேரத்திற்கு, 1,000 லிட்டர் சுத்தி கரிக்கும் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.குடிநீர் மையத்தில் உள்ள இயந்திரத்தில், 5 ரூபாய் நாணயம் செலுத்தி, குழாய் வாயிலாக 20 லிட்டர் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை, அப்பகுதிவாசிகள் பிடித்து சென்றனர். இந்நிலையில், சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் பழுதடைந்தது.இயந்திரத்தை சீரமைக்க, அவளூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நிலையத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து, ஆறு மாதத்திற்கும் மேலாக பயன்பாடின்றி உள்ளது. இதனால், அப்பகுதி வாசிகள், தனியார் கடைகளில் 25 ரூபாய் வரை செலவழித்து, தண்ணீர் கேன் வாங்கும் அவலநிலை உள்ளது.எனவே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவளூர் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Jan-2025