மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
02-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், மேல் ஓட்டிவாக்கம், கூத்திரம்மேடு ஆகிய கிராமங்களில் இருந்து, 20க்கும் மேற்பட்டோர், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த, அனந்தலை கிராமத்தில், துக்க சம்பவத்திற்கு மகேந்திரா வேனில் சென்றனர். அப்போது, தாமல் கிராமம் அருகே சென்ற போது, வாகனத்தின் டயர் வெடித்ததில், நிலை தடுமாறி சாலை ஒரத்தில் கவிழ்ந்தது. இதில், சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2024