உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தி.மலை சென்ற திருக்குடை காஞ்சி பக்தர்கள் வரவேற்பு

தி.மலை சென்ற திருக்குடை காஞ்சி பக்தர்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு ஹிந்து ஆன்மிக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும், திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா பிரம்மோற்சவத்தின் போது, அண்ணாமலையாருக்கு ஏழு திருக்குடைகள் உபய யாத்திரையாக எடுத்துச் சென்று காணிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, நடப்பாண்டு சென்னை திருமுல்லைவாயல் கொடியுடையம்மன் உடனுறை மாசிலாமணீஸ்வரர் கோவிலில் இருந்து, கடந்த 2ம் தேதி ஏழு திருக்குடைகளுடன் உபய யாத்திரை ஊர்வலம் புறப்பட்டது.பல்வேறு ஊர்கள் வழியாக வந்த திருக்குடை உபய யாத்திரை குழுவினர், நேற்று காலை காஞ்சிபுரம் வந்தனர். சிவனடியார்களுடன் வந்த திருக்குடைகளுக்கு காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் உள்ள ஆழ்வார் பங்களாவில் உள்ள நாராயணகுரு சேவாஸ்ரம வைத்திய சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து, காஞ்சியில் நான்கு ராஜ வீதிகளிலும், ஹிந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை நிறுவனர் லிங்கேசுவரன் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஊர்வலத்தில் ஆதி அண்ணாமலையார் அருள்வாக்கு பீடத்தின் ஒருங்கிணைப்பாளர் பவானிசங்கர் உட்பட ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்றனர். தொடர்ந்து திருக்குடை உபய யாத்திரை குழுவினர் திருவண்ணாமலைக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !