மேலும் செய்திகள்
புதுமாப்பிள்ளை 'எஸ்கேப்' காதல் மனைவி புகார்
01-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காவல் எல்லைக்குட்பட்ட 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியும், காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 22, என்பவரும் சில நாட்களாக பழகி வந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி, விக்னேஷுடன், சிறுமி கோவிலுக்கு செல்வதாக கூறி காஞ்சிபுரம் வந்துள்ளார். தன் நண்பர் தனுஷ், 22, என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு, விக்னேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்தார். போக்சோவில் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 4ம் தேதி, கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, காஞ்சி தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், வேலுார் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 22, என்பவர் சிறுமியை அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்தனர்.
01-Jan-2025