காமாட்சியம்மன் கோவில் மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நான்கு மாட வீதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்இந்நிலையில், வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதியில், 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாலையை மறித்து, ஆட்டோ ஸ்டாண்ட் போல நிறுத்தப்படுவதால், இப்பகுதியில் ஒரு வாரமாக மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. நெரிசலில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, நெரிசலை தவிர்க்கும் வகையில், காமாட்சியம்மன் கோவில் நான்கு மாட வீதிகளிலும், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு போலீசார் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.