உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வன்கொடுமை குற்றங்கள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

வன்கொடுமை குற்றங்கள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஊராட்சி தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. இப்பயிற்சியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.பயிற்சியில் ஏராளமான ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை குற்றங்கள், வன்கொடுமை குற்றங்கள் பற்றியும் அதற்கான சட்டங்கள் பற்றி இப்பயிற்சியில் கூறப்பட்டது.ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளும், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பற்றி ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.அரசு திட்டங்கள், வன்கொடுமை சட்டங்கள் பற்றி கிராம மக்களுக்கு ஊராட்சி தலைவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலி, போலீஸ் டி.எஸ்.பி., சங்கர் கணேஷ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ