ஆதரவற்ற மனநலம் பாதித்தோருக்கு காஞ்சியில் சிகிச்சை மையம் திறப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், ஆதரவற்ற மனநலம் பாதித்தோருக்கு, சிகிச்சை மையம் திறக்கப்பட்டு நேற்று உள்ளது.காஞ்சிபுரத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதித்த ஆண், பெண் என, இருபாலரும் நகர் முழுதும் சுற்றி வருகின்றனர். சாலையோரங்களிலும், கோவில்கள் அருகிலும் அவர்களை பார்க்க முடிகிறது.அதுபோன்று, மனநலம் பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையத்தை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.இந்த சிகிச்சை மையம், 10 ஆண்களுக்கும், 10 பெண்களுக்கும் என, மொத்தம் 20 படுக்கைகள் கொண்டதாக உள்ளது. தமிழக அரசு, தேசிய சுகாதார திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மையத்தை செயல்படுத்தும்.இதில், அரசு மனநல மருத்துவர்கள், நோயாளிகளுக்கான உறைவிடம், உணவு, படுக்கை, கழிப்பறை வசதி, செவிலியர்கள், மூன்று சுகாதாரப் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இணைந்து, புனர்வாழ்வு சேவைகளை ஒருங்கிணைந்து வழங்கப்படும்.ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பொது இடங்களில் காணப்பட்டால், 104 14416 108 மற்றும் 99722 51956 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குனர் ஹலாறினா ஜோசிடா நளினி, மருத்துவமனை கண்காணிப்பாளர் செந்தில்குமரன், மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.