தி.மு.க.,வில் இணைந்தனர் இரு சுயேச்சை கவுன்சிலர்கள்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரு சுயேச்சை கவுன்சிலர்கள், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். இதையடுத்து மாநகராட்சியில் தி.முக., கவுன்சிலர்களின் எண்ணிக்கை, 35 ஆக உயர்ந்துள்ளது. தி.மு.க.,வின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், மாவட்ட செயலர் சுந்தர் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் சுயேச்சை கவுன்சிலர்கள் இருவர் தி.மு.க.,வில் இணைந்தனர். மாநகராட்சியில் உள்ள 16 வது வார்டு கவுன்சிலர் சாந்தி மற்றும் 27 வது வார்டு கவுன்சிலர் ஷாலினி ஆகிய இரு சுயேச்சை கவுன்சிலர்கள் இணைந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 கவுன்சிலர்களில், தி.மு.க., கவுன்சிலர்கள், 33 பேர் உள்ள நிலையில், மேலும் இருவர் தி.மு.க.,வில் இணைந்ததால், 35 கவுன்சிலர்கள் தற்போது உள்ளனர்.