உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை அடைப்பு: தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடை அடைப்பு: தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் தாலுகா அலுவலகம் உள்ளது. இவ்வளாகத்தில், பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலக சாலை, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், பாதாள சாக்கடை மூடி வழியாக, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !