உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இல்லாத தர்க்காஸ் குளம்

தடுப்பு இல்லாத தர்க்காஸ் குளம்

கப்பான்கோட்டூர்,:சாலை ஓரத்தில் ஆபத்தாக இருக்கும், தர்க்காஸ் கிராம பொது குளத்திற்கு, தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. எடையார்பாக்கம் அடுத்த, கண்டிவாக்கம் கிராமத்தில் இருந்து, கப்பான்கோட்டூர் கிராமம் வழியாக, ஓ.எம்.மங்கலத்திற்கு செல்லும் கிராமப்புற சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, சிவபுரம், குப்பம், சகாயத்தோட்டம் ஆகிய பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், கண்டிவாக்கம் கிராமம் வழியாக பரந்துார், மதுமரங்கலம், புரிசை ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையோரத்தில், சவுண்டபாளையம் கிராமம் அருகே, தர்க்காஸ் கிராமத்திற்கு சொந்தமான பொது குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் மண் தடுப்பு மற்றும் கம்பி தடுப்புகள் இல்லை. மேலும், சாலையோர வளைவில் ஆபத்தாக குளம் அமைந்துள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்வோர், நிலை தடுமாறி தர்க்காஸ் குளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிவாக்கம்- - ஓ.எம்.மங்கலம் சாலையோர வளைவில் இருக்கும், தர்க்காஸ் குளத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை