தடுப்பு இல்லாத தரைப்பாலம் பள்ளூரில் விபத்து அபாயம்
திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் கிராமம் வழியாக, பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையின் வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம், ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர்.இரு ஆண்டுகளுக்கு முன், விருதசீரநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியாதால், திருமால்பூர் - பள்ளூர் இடையே செல்லும் தரைப்பாலம் சேதம் ஏற்பட்டது.இதனால், பள்ளூர் - பனப்பாக்கம் இடையே வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்தனர். இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தவில்லை.இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.