உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

வாலாஜாபாத் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 1வது வார்டு, வெள்ளேரியம்மன் கோவில் பகுதியில், அம்பேத்கர் தெரு உள்ளது. இக்குடியிருப்பு பகுதியில், 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அம்பேத்கர் தெருவின் இருபுறமும் உள்ள குடியிருப்புவாசிகள், கடந்த காலங்களில் தெரு பகுதியை ஆக்கிரமித்து, தங்களது வீடுகளோடு இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இதனால், 8 அடி அகலத்திற்கான அத்தெரு, தற்போது 6 அடி அகலம் கொண்டதாக, நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.இதனால், அம்பேத்கர் தெருவில் வாகனங்கள் கடப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. மேலும், அத்தெருவாசிகள், தங்கள் வீட்டு கழிவுநீரை தெருவில் விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, இத்தெருவில் வருவாய்த் துறையினர் முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அதை தொடர்ந்து, அத்தெருவில் மழை வடிநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ