உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி, 18 வார்டுகளில் 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, நல்லூர், நீரடி, சின்னநாரசம் பேட்டை, பெரியநாரசம் பேட்டை ஆகிய பகுதிகளில், தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெரு நாய்களால், பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். தெருக்களில் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், உத்திரமேரூர் பேரூராட்சியில், ஒராண்டிற்கும் மேலாக, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது. எனவே, உத்திரமேரூர் பேரூராட்சியில், தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி