சாலையோரம் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
ப டப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில், வியாழக் கிழமைதோறும் காய்கறி சந்தை நடத்தப்படுகிறது. அங்கிருந்து காய்கறி கழிவுகளை, வியாபாரிகள் செரப்பனஞ்சேரி ஏரியோரம், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் கொட்டுகின்றனர். நாளடைவில் காய்கறி கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. தவிர, காய்கறிகளை உண்ணவரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சாலையோரங்களில் காய்கறி கழிவுகளை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி. முருகன், செரப்பனஞ்சேரி.