உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விபத்தில் சிக்கும் வாகனங்களால் வேடிக்கை பார்ப்போருக்கு சிக்கல்

விபத்தில் சிக்கும் வாகனங்களால் வேடிக்கை பார்ப்போருக்கு சிக்கல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த இருவழிச் சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 44 கி.மீ., துாரத்திற்கு, 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, நான்குவழிச் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காஞ்சிபுரம் முதல், பரமேஸ்வரமங்கலம் வரையில், 21 கி.மீ., துாரம் தார் சாலை போடும் பணி நிறைவு பெற்று உள்ளது.இந்த சாலை விரிவாக்க பணியின் போது, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி மழைநீர் கால்வாய் ஓரம் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கம்பிகள் மீது, இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.இரு தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், ஊவேரி கிராமம் அருகே, இரு எய்ச்சர் லாரிகள் மோதிக் கொண்டதில், சாலை தடுப்பு சேதம் ஏற்பட்டு, உள்ளது. இந்த விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி, அதே சாலை மறுபுறத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து நடந்த இடத்தை பார்த்துக் கொண்டு செல்லும் போது, எதிரே வரும் வாகனத்தின் மீது மோதும் அபாயம் உள்ளது.எனவே, சாலை விபத்தில் சிக்கும் வாகனங்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை