உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலம் கட்டும் பணி நிறைவு இணைப்பு சாலை எப்போது?

பாலம் கட்டும் பணி நிறைவு இணைப்பு சாலை எப்போது?

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், இறந்தவர் உடலை கொண்டு செல்லும்போது, சுடுகாடு பாதையின் குறுக்கே நீர்வரத்து கால்வாய் இருப்பதால், கடந்து செல்ல சிரமமாக இருந்து வந்தது.இதை தொடர்ந்து, கால்வாய் மீது பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். நடப்பு 2024 -- 25ம் நிதியாண்டில், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் செலவில், நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், அவ்வழியே இறந்தவர் உடலை, அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்களுக்கு, இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, சுடுகாடு பாதையில் உள்ள, பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை ஏற்படுத்த, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை