மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கு நிதியுதவி
09-Dec-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், கொடி நாள் நிகழ்ச்சி, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், போர் நடவடிக்கையின்போது உயிர் நீத்த படைவீரர் ஏகாம்பரம் என்பவரின் மனைவி குமாரிக்கு பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி, கலெக்டர் கலைச்செல்வி கவுரவித்தார். மேலும், கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் மலரையும் வெளியிட்டார். இதை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர் இருவருக்கு தலா, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகையை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார் இந்நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சீனிவாசன், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
09-Dec-2025