உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?

பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடத்தை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூரில் உள்ள காஞ்சிபுரம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில், 1972ல், கட்டப்பட்ட கட்டடம், முறையாக பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. இதனால், இக்கட்டடம், 15 ஆண்டுக்கு முன் பயன்பாட்டில் இல்லாமல் போனது.அதற்கு பதிலாக வேறொரு கட்டடம் கட்டப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத பள்ளி கட்டடத்தின் அருகே, தினமும் இறைவணக்க கூட்டம் நடந்து வருகிறது.எனவே, உத்திரமேரூரில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத, பள்ளி கட்டடத்தை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை