உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோவில் கருவறையில் மண்டை ஓடுகளுக்கு பூஜை

கோவில் கருவறையில் மண்டை ஓடுகளுக்கு பூஜை

காஞ்சிபுரம்:சுங்குவார்சத்திரம் அடுத்த, திருமங்கலம் கிராமத்தில், பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில் கருவறையில், மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்து வைத்துள்ளனர். நேற்று பகலில், அம்மனை தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவில் கேட் பூட்டிய நிலையில், கருவறையில் மனித மண்டை ஓடுகளுக்கு பூஜை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சுங்குவார்சத்திரம் போலீசார் முறையாக ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என, கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி