உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

கிணற்றில் மூழ்கி இளைஞர் பலி

படப்பை:குன்றத்துார் அருகே படப்பை அடுத்த சிறுமாத்துார் பகுதியை சேர்ந்தவர் அருண்,30. தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் சிறுமாத்துார் ஏரி அருகே உள்ள கிணற்றின் கைப்பிடி சுவர் மீது அமர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், படப்பை தீயணைப்பு வீரர்களுடன் சென்று, கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த அருண் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை