மேலும் செய்திகள்
சாலை விபத்தில் வாலிபர் பலி
29-Nov-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துார் கிராமம் அருகே, கொன்றை பூ தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 23. அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஹெல்மெட் அணியாமல் ‛பல்சர்' பைக்கில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செட்டிபேடு அருகே சென்ற போது, முன்னால் சென்ற டேங்கர் லாரி இடது புறமாக திரும்பிய போது, அருண்குமார் நிலைதடுமாறி டேங்கர் லாரியில் மோதி கீழே விழுந்தார்.அப்போது, டேங்கர் லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்பதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
29-Nov-2024