மேலும் செய்திகள்
கார் மோதி டூ-வீலரில் சென்றவர் பலி
07-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் திலீப், 21. பூக்கடைச்சத்திரம் பகுதியில் பூ கட்டும் வேலை செய்து வந்தார்.பூ கட்டும் வேலை சம்பந்தமாக நேற்று முன்தனம் திருப்பதி சென்றுவிட்டு, நேற்று அதிகாலை, காஞ்சிபுரம் வந்துள்ளார். தன் வீடு அமைந்த பகுதியில் உள்ள கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு திலீப் சென்றார்.அப்போது, அங்கு அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே திலீப் உயிரிழந்தார்.இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து பற்றி விசாரிக்கின்றனர்.
07-Oct-2024