/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி மினிலாரி கதவு திறந்து விபத்து
பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லுாரி மாணவர் பலி மினிலாரி கதவு திறந்து விபத்து
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அம்சி பகுதியைச் சேர்ந்தவர் பெர்பின் சிங் 20. இவர் மார்த்தாண்டத்தில் ஒரு கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற போது காப்புக்காடு பகுதியில் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த மினி லாரியின் கதவை டிரைவர் திறந்தார். இது பெர்பின் சிங் பைக் மீது இடித்ததில் அவர் தடுமாறி ரோட்டில் விழுந்தார். அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் பெர்பின் சிங் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியானார். மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.