உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காந்தி நினைவு தினத்தையொட்டி சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

காந்தி நினைவு தினத்தையொட்டி சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

காந்தி நினைவு தினத்தையொட்டி சமூக நல்லிணக்க உறுதிமொழி ஏற்புகுளித்தலை:குளித்தலை அரசு கலைக்கல்லுாரி, கரூர் நேரு யுவகேந்திரா, இளைஞர் மேம்பாட்டு திட்டம், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், கல்லுாரி வளாகத்தில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர்(பொ) அன்பரசு தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவர்கள், பேராசிரியர்கள் சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கரூர் நேரு யுவகேந்திரா சார்பில் பரிசு வழங்கப்பட்டது.இளைஞர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் பத்மபிரியா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாபுநாத், வெங்கடேசன், கரூர் நேரு யுவகேந்திரா தன்னார்வலர் கனக லட்சுமி, கல்லுாரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேணுகோபால், உடற்கல்வி இயக்குனர் (பொ) வைரமூர்த்தி மற்றும் பேராசிரியர்கள் கோபி, விஜயலட்சுமி, கோபாலகிருஷ்ணன் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ