உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய்பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய்பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய்பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வுகரூர்:கரூர் மாவட்டம், புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை மற்றும் மாயனுார் பகுதியில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அதில், கதவணையின் வலது கரை கரூர் மாவட்டம், புகழூர் அருகில் புஞ்சை புகழூர் கிராமத்திற்கும், இடது கரை நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் அருகில் அனிச்சம்பாளையம் கிராமத்திற்கும் இடையே, 1,056 மீட்டர் நீளத்தில், 73 கதவுகளுடன் காவிரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வருகிறது. கதவணையானது வினாடிக்கு, 3.60 லட்சம் கன அடி நீர் வெளியேற்றும் வகையிலும், 0.80 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.கதவணை அமைப்பதால், காவிரி ஆற்றின் வலது புறம் உள்ள வாங்கல் வாய்க்காலின் மூலம், 1,458 ஏக்கர் நிலங்களும், இடதுபுறம் அமைந்துள்ள மோகனுார் வாய்க்காலின் மூலம், 2,583 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, காவிரி, வைகை, குண்டாறு வெள்ளநீர் இணைப்பு கால்வாய் திட்டப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். மாயனுார் கதவணையிலிருந்து, வெள்ள உபரிநீரை திசை திருப்பி கால்வாய் மூலம் வறட்சி பாதிப்புக்குள்ளான கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீரை மறு ஊட்டம் செய்வதற்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, 118.45 கி.மீ., பணிகள் மேற்கொள்ள எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில், 171 கோடி ரூபாய் மதிப்பில், 4.10 கி.மீ., நீளத்திற்கு வெள்ளநீரை எடுத்து செல்லும் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக கரூர் மாவட்டத்தில், 17 கிராமங்களில், 427.81 ஹெக்டர் பட்டா நிலங்கள் மற்றும் 36.21 ஹெக்டர் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி நடக்கிறது.நெடுஞ்சாலையை, ரயில்வே தண்டவாளத்தின கீழ் வழியாக கொண்டு செல்ல பூர்வாங்க பணிகள் நடக்கிறது. வரும் ஜூன், 30-க்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டங்களில், 1,853 ஏக்கர் நிலங்கள், திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் வட்டங்களில், 1,853 ஏக்கர் நிலங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, இலுப்பூர், குளத்துார், புதுக்கோட்டை வட்டங்களில், 42,171 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆய்வின் போது கலெக்டர் தங்கவேல், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் தயாளகுமார், டி.ஆர்.ஓ.,கண்ணன், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட டி,ஆர்.ஓ., விமல்ராஜ், குளித்தலை சப் - கலெக்டர் சுவாதி ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை