உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போதை பொருள் நடமாட்டம் குறித்த விளக்க கூட்டம்

போதை பொருள் நடமாட்டம் குறித்த விளக்க கூட்டம்

போதை பொருள் நடமாட்டம் குறித்த விளக்க கூட்டம்கரூர்,:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், போதை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை பதிவு செய்ய, மொபைல் செயலி தொடர்பாக செயல் விளக்க கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:போதை பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகார்களை மொபைல் செயலியில் பதிவு செய்தல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருள் ஒழிப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும். மாணவர்கள் மத்தியில், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் விதமாக, மாணவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவது அவசியமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், மதுவிலக்கு டி.எஸ்.பி., பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை