சேதமாகி கிடக்கும் மின் பெட்டிசீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
சேதமாகி கிடக்கும் மின் பெட்டிசீரமைக்க மக்கள் வலியுறுத்தல்கரூர்:கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில், சி.எஸ்.ஐ., பள்ளி அருகில் மின் பெட்டி உள்ளது. இந்த பெட்டியின் கதவுகள் சேதமடைந்து திறந்து கிடக்கிறது. மின்பெட்டியில் உள்ள 'பியூஸ் கேரியர்' மற்றும் மின் ஒயர்கள் வெளியில் தெரிகின்றன.இதை எதிர்பாராத விதமாக யாராவது தொட்டால், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த சாலை மற்றும் பள்ளி மாணவர்கள் வந்து செல்வதால், தவறுதலாக தொட்டு பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், உடைந்த பெட்டியை சீரமைத்து, மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.