உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

லாலாப்பேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

லாலாப்பேட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான, மருத்துவ சிறப்பு முகாம், லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா துவக்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள், 52 பேர் கலந்து கொண்டனர். முகாமில் குழந்தைகள் நலம், மனநலம், கண் பரிசோதனை, காது, முடநீக்கியல் மருத்துவம் ஆகிய மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான மருத்துவ ஆலோசனை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கான அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. ஆறு பேருக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆறு பேருக்கு ரயில் பாஸ் தரப்பட்டது. முகாமை கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர் மற்றும் கல்வி மைய பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ