உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோழி பண்ணைகளுக்கு தீவனம் ஏற்றிசெல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு

கோழி பண்ணைகளுக்கு தீவனம் ஏற்றிசெல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு

கோழி பண்ணைகளுக்கு தீவனம் ஏற்றிசெல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடுகரூர்:கரூர் அருகே, கோழி பண்ணைகளுக்கு தீவனம் ஏற்றி செல்லும் லாரிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு, தேவையான தீவனம் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுகிறது. பாலக்காடு, கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் இருந்து மாடு, ஆடு, மீன், இறைச்சி கழிவுகளை கொண்ட கோழி தீவனத்தை வேன் மற்றும் லாரிகளில் ஏற்றி வந்து விற்பனை செய்கின்றனர்.இந்த லாரிகள் அனைத்தும், க.பரமத்தியை கடந்து நொய்யல் குறுக்குச்சாலை, வேலாயுதம்பாளையம் வழியாக, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. பெரிய பேரல்களில் தீவனங்கள் மூடப்படாமல் கொண்டு வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'மினி வேன்கள், லாரிகள் மூலம் க.பரமத்தி வழியாக கோழி தீவனங்களை மூடாமல் கொண்டு செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் போது, இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் திரவ கழிவுகள் கொட்டுகின்றன. இவற்றில் ஈ, கொசுக்கள் மொய்க்கின்றன. சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை