மார்க்கெட்டில் குவியும் குப்பைதுர்நாற்றத்தால் மக்கள் அவதி
மார்க்கெட்டில் குவியும் குப்பைதுர்நாற்றத்தால் மக்கள் அவதிகரூர்:கரூர், காமராஜர் மார்க்கெட்டில் குவியும் குப்பையால் கடும் துர்நாற்றம் வீசுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர், காமராஜர் மார்க்கெட் பகுதியில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இப்பகுதிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஊட்டி, திருச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து காய்கறிகள், குளித்தலை, பெட்டவாய்த்தலை பகுதி யில் இருந்து இலைகள் விற்பனைக்கு வருகின்றன. மாநகராட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளுடன், காய்கறி கள், மளிகை கடைகள், பொரி கடைகள், இதர விற்பனை பொருட்கள் செய்யும் கடைகள் மட்டு மின்றி, அந்தந்த கடைகளின் முன்னால் பல்வேறு தரைக்கடைகளும் போடப்பட்டுள்ளன.இந்த கடைகளால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இருந்து மார்க்கெட் வழியாக பி.எஸ்.என்.எல்., அலுவலகம், ஜவஹர் பஜார் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் இலை, வாழை, தக்காளி, கத்திரிக்காய் போன்றவை அழுகிய பின், அவற்றை மார்க்கெட் ஓரமும், இரட்டை வாய்க்காலிலும் கொட்டி விடுகின்றனர். குவியும் குப்பைகளை, மாநகராட்சி நிர்வாகம் தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.