கல்யாண வெங்கடரமண கோவிலில்இன்று தெப்பத்தேர் உற்சவம்
கல்யாண வெங்கடரமண கோவிலில்இன்று தெப்பத்தேர் உற்சவம்கரூர்:கரூர், தான்தோன்றிமலை கோவிலில், இன்று தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது.கரூர், தான்தோன்றிமலையில் அமைந்துள்ள, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி பெருந்திருவிழா, மாசி திருவிழா சிறப்பாக நடப்பதுண்டு. ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருவர். கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது. கடந்த, 10ல் கோவில் மண்டபத்தில், திருக்கல்யாண உற்வசம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. அதற்காக கோவில் எதிரில் உள்ள குளத்தில், பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. குளத்தில் தகர பேரல், மரப்பலகை, சவுக்கு கட்டையால் தெப்பம் கட்டும் பணி நடக்கிறது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் நகர்வதே கண்ணைக் கவர்ந்திழுக்கும். வரும், 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.