பங்குனி உத்திர திருவிழா உற்சவர் திருவீதி உலா
பங்குனி உத்திர திருவிழா உற்சவர் திருவீதி உலாகரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று திருவீதி உலா நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 3ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை உற்சவர், திருக்கயிலாய வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ன்று இரவு, (8ல்) சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, சிறப்பு அபி ேஷகம் மற்றும் மஹாதீபாராதனை, நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.