உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளியணை- திண்டுக்கல் சாலையைஅகலப்படுத்த ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு

வெள்ளியணை- திண்டுக்கல் சாலையைஅகலப்படுத்த ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு

கரூர்:வெள்ளியணை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் சாலையை, அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் இருந்து, தான்தோன்றிமலை, மணவாடி, வெள்ளியணை, கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், எரியோடு வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திண்டுக்கல்லுக்கு செல்கின்றன. ஆனால் மதுரை, திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு, தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் வெள்ளியணை சாலையில் செல்வது குறைந்து வருகிறது. இத னால், வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள, பல்வேறு கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல்லுக்கு, வெள்ளியணை வழியாக திருப்பி விடப்படுகிறது.இதனால் வெள்ளியணை-திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை