உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

குளித்தலை: குளித்தலை தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் ரவி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவ-லர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கடந்த ஜன., 8ல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களை போல கூடுதல் பணியாளர்களை நியமித்திட வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு உரிய தொகையை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ