உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தோகைமலையில் குறுத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை

தோகைமலையில் குறுத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை

குளித்தலை, மலையில், குறுத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், கிறிஸ்தவர்கள் குறுத்தோலையை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகசென்றனர்.ஏசு தவகாலம் என்று கருதப்படும், 40 நாட்களில் தோகைமலை பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி செய்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக குறுத்தோலை ஞாயிறு பவனி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தோகைமலை சமுதாயக்கூடம் அருகே உள்ள புனித கல்லறையில், தென்னங்குறுத்துகளை வைத்து சிறப்பு திருப்பலி செய்தனர்.பின்னர் தென்னங்குறுத்துகளை கையில் ஏந்தியபடி, திருப்பாடல்களை பாடிக்கொண்டு குளித்தலை- மணப்பாறை மெயின் ரோடு வழியாக தோகைமலையில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தேவாலயத்தில், தென்னங்குறுத்துகளை சிலுவையாக வடிவமைத்து, பங்கு தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலியில் ஈடுபட்டனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !