உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

கரூர், கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர்.கரூர், பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த, 6ல் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிறகு, 7ல் குத்து விளக்கு பூஜை, 10ல் பூச்சொரிதல் விழா, 12ல் பொங்கல் வைத்தல், 13ல் அக்னி சட்டி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று காலை, வஞ்சுலீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து, வேம்பு மாரியம்மன் கோவிலுக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இன்று மாலை, 6:00 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை மஞ்சள் நீராட்டு விழா, மாலை, 6:30 மணிக்கு முத்து பல்லாக்கு ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை